×

புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மீது மோதிய கார் எரிந்து நாசம் 2 பேர் உயிர் தப்பினர்

விராலிமலை: புதுக்கோட்டை அருகே அரசு பஸ் மீது கார் மோதி எரிந்ததில் 2 பேர் உயிர் தப்பினர். திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (34). இவர், தனது காரில் திருநெல்வேலியில் இருந்து நேற்றுமுன்தினம் திருச்சி சென்று கொண்டிருந்தார். இவருடன் உறவினர் சம்பத் (64) வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே நள்ளிரவு வந்த போது திருச்சியில் இருந்து விராலிமலை வழியாக மதுரைக்கு 40 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் மீது கார் மோதியது. இந்த விபத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் காரை நிறுத்தி விட்டு அரவிந்த், சம்பத் ஆகியோர் இறங்கி உயிர் தப்பினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த விராலிமலை தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

Tags : Pudukkottai ,Viralimalai ,Aravind ,Srirangam ,Trichy ,Tirunelveli ,
× RELATED இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி –...