சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் காந்தியடிகள் ஜீவா நினைவு அரங்கம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: காந்தியடிகள் மற்றும் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் (ஜீவா) ஆகியோர் சந்தித்துப் பேசிய வரலாற்று் நிகழ்வை போற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் நினைவு அரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் நினைவாக அவ்விடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார். இதை செயல்படுத்தும் விதமாக, 2023-2024ம் ஆண்டிற்கான பொதுப்பணித் துறையின் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், ரூ.3கோடி மதிப்பீட்டில் நினைவு அரங்கம் அமைப்பதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், நாச்சியாபுரம் உள்வட்டம், சிராவயல் கிராமத்தில் இதற்கென தேர்வு செய்யப்பட்ட 0.20.0 ஹெக்டேர் (சர்வே எண் 326/6) நிலத்தில் இந்த நினைவு அரங்கம் அமையவுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிற்பி நாகப்பா கலைக் கூடத்தில் தயாராகி வரும் காந்தியடிகள், தோழர் ஜீவானந்தம் (ஜீவா) சிலைகள் அமைப்பு பணியினை பார்வையிட்டார். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: