டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் ஜாமீன் தளர்வுகளை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைக்கலாம் என EDக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாரந்தோறும் எதற்காக செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும்? விசாரணைக்கு நேரில் அழைக்கும்போது விலக்கு வேண்டுமெனில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
