×

நெல்லை தீயணைப்புத்துறை துணை இயக்குநரை சிக்க வைக்க முயன்ற சம்பவத்தில் மேலும் 2 தீயணைப்பு அலுவலர்கள் கைது!!

நெல்லை: லஞ்சம் புகாரில் அதிகாரியை சிக்க வைக்க முயற்சி நடந்திருக்கிறது துணை இயக்குநர் அலுவலகத்தில் நவம்பர் 18ல் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நெல்லையில் மேலும் 2 தீயணைப்பு அலுவலகர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நெல்லை என்ஜிஓ காலனி பகுதியில் தீயணைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை இயக்குநர் அலுவலகத்தில் சரவணபாபு என்பவர் பணியாற்றி வருகிறார். சரவணபாபு மீது கடந்த 18ஆம் தேதி லஞ்ச வாங்குவதாக நெல்லை மாவட்டம் லட்ச ஒழிப்புத்துறையினருக்கு ஒரு புகார் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் 18ஆம் தேதி மதியம் நேரத்தில் அந்த தீயணைப்பு துறை மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்பொழுது சரவணபாபு மற்றும் செந்தில்குமார் என்ற தீயணைப்பு துறையிடம் இருந்து ரூ.2.51 பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்பாக லட்ச ஒழிப்பு துறையினர் சரவணபாபு மற்றும் செந்தில்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த முந்தையநாள் இரவு ஒரு மர்மநபர் உள்ளே புகுந்து அந்த பணத்தை வைத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வந்து வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதை தொடர்பாக சரவணபாபு நெல்லை மாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இது ஒரு சதித்திட்டம் என்ற தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்தை திட்டியது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு அலுவலர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர் முத்துச்சுடர் என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் நடைபெற்ற தீவிர விசாரணையில் அந்த சிசிடிவியில் வந்து அந்த பணத்தை வைத்து சென்ற நபர் யார் என்பது குறித்து நடைபெற்ற அவர் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் நேற்று அவரை இரண்டாவது கட்டமாக கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

Tags : Nellai ,Anti-Corruption Department ,Nellai… ,
× RELATED கள்ளக்குறிச்சியில் பெற்றோரை...