ஜெயங்கொண்டம் அருகே விவசாய தொழிலாளி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம், டிச.8: ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் ராஜேந்திரன் (46). விவசாய தொழிலாளி. இவர் புதிதாக வீடு கட்டி உள்ளார்.

கடந்த 19ம் தேதி இரவு பழைய வீட்டிலிருந்த ஆடுகளை புதிய வீட்டில் கட்டி தங்கியிருந்தார். இந்நிலையில் அதிகாலை எழுந்து பழைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிரு்த ஒரு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் போலீசில் அளித்த புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த காத்த முத்து மகன் உத்திராபதி (55) மற்றும் கொள்ளிடம் கீழவெள்ளம் தைக்கால் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை மகன் ராஜகோபால் (43) ஆகிய இருவரை கைது செய்து மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: