சென்னை: தவெகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். சிறந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தம்மை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நாஞ்சில் சம்பத் கழகத்தின் பரப்புரை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர். பொதுச்செயலாளர் என்.ஆனந்த்துடன் இணைந்து தன்னுடைய பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.
