×

அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

சென்னை: அம்பேத்கர் வாழ்வே ஒரு பாடம் அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அம்பேத்கர் எனும் பேரோளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என அம்பேத்கர் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வரின் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில்:
புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!

எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.

அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!

Tags : Ambedkar ,K. Stalin ,Chennai ,Ambedkar Memorial Day ,
× RELATED மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு...