சென்னை விமான நிலையத்தில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பற்றிய விவரங்களுக்கு 044-22565113; 044-22565112 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை விமான நிலையத்தில் இன்று புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய பெரும்பாலான இண்டிகோ உள்நாட்டு விமானங்களின் சேவைகளும் நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. சில சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவை ரத்து மற்றும் தாமதம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பற்றாக்குறை, திருத்தப்பட்ட விமானப் பணி நேர வரம்பு (FDTL) விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் மென்பொருள் கோளாறு போன்ற காரணங்களால் இந்தத் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான நிலையங்களிலும் இண்டிகோ விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் பற்றிய விவரங்களுக்கு 044-22565113; 044-22565112 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
