சென்னை: அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், நேற்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். பின்னர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி: தமிழகத்தில் தேர்தல் நடக்க இருப்பதால், அதிகாரத்தில் இருக்கும் கட்சியை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜவை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விஜய் என்னிடம் கூறினார். திருப்பரங்குன்றம் பற்றி ஏன் பேசவில்லை என்று நான் விஜய்யிடம் கேட்கவில்லை. என்னை பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது விஜய்க்கு நல்லது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பதிவில், ‘விஜய் என்னை பார்த்ததும், ‘நான் உங்கள் ஃபேன் தெரியுமா?’ என்றார். நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக்கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
