பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நீடிக்கப்பட்ட காலத்திற்குள் வாக்காளர்கள் வழங்க வேண்டும்

 

திருப்பூர், டிச. 3: பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நீடிக்கப்பட்ட காலத்திற்குள் வாக்காளர்கள் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் வருகிற 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 24,44,929 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இவை இணைய வழியாக பதிவேற்றம் செய்யும் பணிகளும் விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி பாண்டியன் நகர் பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணியினை கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார். அப்போது தோ்தல் ஆணையம் வழங்கிய கூடுதல் கால அவகாசத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

 

Related Stories: