×

எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து திமுக நிர்வாகியிடம் கேட்டறிந்த முதலமைச்சர்

கோவை,நவ.29: எஸ்.ஐ.ஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,திமுக நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவியிடம் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசினார்.

அப்போது கோவை வடக்கு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் எந்தளவு முடிந்துள்ளது?, எவ்வாறு செல்கிறது? உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்த அவர், எந்தவொரு தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடாத அளவிற்கு கண்காணிக்கவும், தொடர்ந்து மக்களை நேரில் சென்று சந்தித்து உரையாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

 

Tags : Chief Minister ,DMK ,Coimbatore ,M.K. Stalin ,Stalin ,Coimbatore North District ,Thondamuthur A. Ravi ,
× RELATED திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை