கோவை, டிச.3: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,‘‘அரசு நிர்ணயித்த ஆட்டோ மீட்டர் கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது.
எரிபொருள், உதிரிபாகங்கள், வாகன பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ள நிலையில், மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதால் கடும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை திருத்தி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
