×

பைக் மீது பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

 

மதுக்கரை, டிச. 2: பாலக்காடு மாவட்டம் இளுத்தச்சன் பகுதியை சேர்ந்த சிவதாசின் மகன் ராகுல் (25). ஆயலூர் பகுதியை சேர்ந்த பப்பவுக்குட்டனின் மகன் அனில்ஜித் (26). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் ஈச்சனாரி எல் அண்டு டி பைபாஸ் ரோடு பகுதியில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை ராகுல் ஓட்ட அனில்ஜித் பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த பைக் ஈச்சனாரி அருகேயுள்ள எல் அண்டு டி பைபாஸ் நான்கு ரோடு சந்திப்பு அருகே மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வந்தபோது அதன் எதிர் திசையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பஸ் ராகுல் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த அனில்ஜித் சுந்தராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Madukkarai ,Rahul ,Sivadas ,Iluthachan ,Palakkad district ,Aniljit ,Pappavukkattan ,Ayalur ,Ichanari L and ,D ,
× RELATED திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை