×

வீட்டில் விபசாரம்: முதியவர் கைது

கோவை, ஆக. 30: கோவை பொரிக்கார சந்து பகுதியை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், பாப்பநாயக்கன் பாளையத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய முதியவர் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து சென்றார்.

பின்னர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதியவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த முதியவர் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜன் (70) என்பதும், அவர் பாப்பநாயக்கன் பாளையத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Tags : Coimbatore ,Porikkara Sandhu ,Papanayakkan Palayam ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது