×

துணை முதல்வரிடம் வாழ்த்து

கோவை, ஜன. 10: மேட்டுப்பாளையம் தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில், உதயநிதி பிறந்தநாள் விழாவையொட்டி சிறுமுகை டி.அறிவழகன், பொதுமக்களிடம் மரம் நடுவோம், மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், என கருத்தை வலியுறுத்தி 170கி.மீ தொலைவு நடை பயணம் மூலம் 49 ஆயிரம் விதைப்பந்துகளை சாலையின் இரு ஓரங்களிலும் விதைத்தார்.

இவரின் பசுமை விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் புதிய உலக சாதனை சான்றிதழை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதி மன்ற நகர செயலாளர் அமீர் முகமது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags : Deputy ,Chief Minister ,Coimbatore ,Mettupalayam Chief Udhayanidhi Stalin Charitable Foundation ,Sirumugai T. Arivalagan ,Udhayanidhi ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது