×

கணவருடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து பலி

கோவை, ஆக.30: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஹரிதாஸ் (66). இவரது மனைவி கிருஷ்ணவேணி (61). இவர், நேற்று முன்தினம் பைக்கில் தனது மனைவி கிருஷ்ணவேணியை அழைத்து கொண்டு கோவை மருதமலை கோயிலுக்கு வந்தார். சட்டக் கல்லூரி அருகே வந்தபோது பைக் திடீரென தடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த கிருஷ்ணவேணி கீழே விழுந்தார்.

இதில், கிருஷ்ணவேணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Haridas ,Palakkad, Kerala ,Krishnaveni ,Marudhamalai temple ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது