×

கல்வி, சுகாதாரத்துறையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற நிதி ஒதுக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வி, உயர்க்கல்வி ஆகிய இரண்டுக்கும் சேர்த்து, மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் குறைந்தது 15 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அதை விடக் குறைவாக 13.7 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் அதிக அளவாக டெல்லி அரசு கல்விக்காக அதன் மொத்த பட்ஜெட் மதிப்பில் 24.2 சதவீதம் ஒதுக்கியுள்ளது. சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 26ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. முதன்மைத் துறையான வேளாண்மைக்கு குறைந்தபட்சம் 6.3 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகம் அதைவிடக் குறைவாக வெறும் 6.1 சதவீதம் மட்டும் தான் ஒதுக்கீடு செய்கிறது. எனவே, தமிழ்நாட்டில் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Tamil Nadu ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...