×

காங்கயத்தில் பெண்ணை தாக்கிய போதை ஆசாமி

காங்கயம், ஆக.20: காங்கயம் பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் பெயர் விலாசம் இல்லாத சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். காங்கயம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் வெளியூர் ஆண்களும் தங்குவதுண்டு. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 45 வயதுடைய ஆண் நபர் தனது செல்போனை திருடியதாக கூறி பேருந்து நிலையத்தில் 60 வயதுடைய பெண்ணையும் அவரது 70 வயதுடைய கணவரையும் காலணியால் அடித்தும், உதைத்து கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

மேலும் போலீசாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டிய வீடியோ வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போதை ஆசாமியை தடுத்து அனுப்பி வைத்தனர். காங்கயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என மூதாட்டி தெரிவித்தார்.

 

Tags : Kangayam ,
× RELATED ரயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்