×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

திருப்பூர், ஜன. 9: திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை, மாவட்ட கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார். வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை மாவட்ட கலெக்டர் மனிஷ் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவனத்திலிருந்து 9 பொறியாளர்கள் மேற்கொள்கிறார்கள்.

இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3,528 கட்டுப்பாட்டு இயந்திரம், 3,810 வாக்காளர் சரிபார்க்கும் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2,536 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவைப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 5565 பேலட் யூனிட், 3997 கட்டுப்பாட்டு இயந்திரம், 4295 வி.வி.பேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் உள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார்.

 

 

Tags : Tiruppur ,Manish ,
× RELATED பைக்குகள் மோதி 8ம் வகுப்பு மாணவர் பலி