×

மனநல காப்பகம் அமைக்க நிதி ஒதுக்கீடு: இடம் கொடுக்குமா பழநி கோயில் நிர்வாகம்?

பழநி: பழநியில் மனநல காப்பகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ள நிலையில் கோயில் நிர்வாகம் இடம் வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் பழநி நகரின் அடிவார பகுதியில் ஏராளமான மடங்கள், அன்னதான சத்திரங்கள் போன்றவை உள்ளன.

இதனால் சிலர் தங்களது வீடுகளில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து பழநி நகரில் விட்டு செல்கின்றனர். கேட்பாரற்று திரியும் இவர்களில் பெண்களின் நிலை சொல்ல முடியாத அளவிற்கு வேதனையானதாக இருக்கும். மது அடிமைகள் சிலரால் மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டு, கர்ப்பணியாவது பழநி நகரில் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்க கேட்பராற்று சுற்றுத்திரியும் இதுபோன்றவர்களை பாதுகாக்க பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பழநி நகரில் மனநல காப்பகம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் காப்பகம் அமைக்க இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் காப்பகம் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



Tags : Palani Temple , Mental Health, Funding, Palani Temple Management
× RELATED பழநி கோயிலில் நீதிபதி குழு ஆய்வு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்