×

குழந்தைகளுக்கான அனிமேஷன் படம்: கிகி அன்ட் கொகொ டீசர் வெளியீடு

சென்னை: குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம், ‘கிகி அன்ட் கொகொ’. இதை பி.நாராயணன் இயக்கியுள்ளார். இதன் டீசர் வெளியீட்டு விழாவில் இனிகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனா பேசுகையில், ‘இரண்டு வயதில் இருந்து 14 வயது வரையுள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, என்னென்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பது கதை.

இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான கதை’ என்றார். பி.நாராயணன் பேசும்போது, ‘நாம் சராசரி மனிதனாக இருக்கும்போது, நடைமுறையில் என்னெ்ன நடக்கிறது என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்’ என்றார். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீனிகா பேசுகையில், ‘இதில் நான்தான் கொகொ. அவருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

படத்தில் நடித்த பிறகு எனக்கும் நாய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது’ என்றார். விஎஃப்எக்ஸ் இயக்குனர் கோகுல்ராஜ் பாஸ்கர், விஎஃப்எக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் ஜி.எம்.கார்த்திகேயன், சிவராஜ், படத்தின் இசை அமைப்பாளர் சி.சத்யா கலந்துகொண்டனர்.

Tags : Chennai ,India ,P. Narayanan ,Inika Productions ,CEO ,Meena ,
× RELATED மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்