- நானி
- கயாடு லோஹர்
- பிரதீப் ரங்கநாதன்
- அதர்வா முரளி
- ஜி. விபிரகாஷ் குமார்
- நிரந்தர கணக்கு எண்
- இந்தியா
- துல்கர் சல்மான்
பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘டிராகன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், கயாடு லோஹர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அதர்வா முரளி ஜோடியாக ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக ‘இம்மார்ட்டல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ ஆம் கேம்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் ரசிகர்களின் காதல் நாயகியாக வலம் வரும் அவர், தெலுங்கில் ஒரு படத்துக்கு தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். காந்த் ஒடெலா இயக்கத்தில் நானி, மோகன் பாபு நடிப்பில் உருவாகும் படம், ‘தி பாரடைஸ்’.
நானியின் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தது. தற்போது அந்த ஹீரோயின் கயாடு லோஹர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் 40 நாட்கள் படமாக்கப்படுகிறது. இதற்காக விரைவில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். வரும் மார்ச் 26ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
