×

தமன்னாவின் சொத்து மதிப்பு

 

தென்னிந்திய படவுலகில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய தமன்னா, தற்போது இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக புகழ்பெற்றுள்ளார். சமீபகாலமாக இந்தியில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடி வருகிறார். இந்நிலையில், நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு திரையுலகினர் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி வரும் தமன்னாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.130 கோடி என்று சொல்லப்படுகிறது. மேலும், பீச் ஹவுஸ் ஒன்றை தவிர்த்து 3 தனி வீடுகளையும் சொந்தமாக வைத்திருக்கிறார். தவிர, ரூ.43 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 320ஐ, ரூ.1 கோடி மதிப்புள்ள பென்ஸ் கார், ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஜேரோ கார், ரூ.75 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார்.

 

Tags : Tamannaah ,India ,
× RELATED ‘ரெட்ட தல’க்கு நன்றி சொன்ன சித்தி இத்னானி