×

பொங்கல் போட்டியில் இருந்து விடா முயற்சி வெளியேறியதால் 9 படங்கள் என்ட்ரி

சென்னை: பொங்கலை முன்னிட்டு 9 படங்கள் புதிதாக ரிலீசுக்கு தயாராகியுள்ளன. அஜித் குமாரின் ‘விடா முயற்சி’ படம் பொங்கலுக்கு திரைக்கு வராது என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பெரும்பாலான தியேட்டர்கள் கிடைப்பதால் நேற்றிரவு ஒரே சமயத்தில் 9 படங்கள் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளன.

அதில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’, சிபிராஜ் நடிக்கும் ‘டென் ஹவர்ஸ்’, சண்முக பாண்டியனின் ‘படைத் தலைவன்’, ஆகாஷ் முரளியின் (முரளியின் இளைய மகன்) ‘நேசிப்பாயா’, மற்றும் புதுமுகங்களின் ‘தருணம்’, ‘2கே லவ் ஸ்டோரி’, மற்றும் ‘மெட்ராஸ்காரன்’, ‘தருணம்’, ‘ஃபிரீடம்’, ‘சுமோ’ என 9 படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவித்துள்ளன. இதில் ஒரு சில படங்கள் தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது. இது தவிர பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கரின் ‘கேம் ேசஞ்சர்’ பொங்கலுக்கு வருவதாக முன்பே அறிவித்து இருந்தன.

Tags : Pongal ,Ajith Kumar ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்