×

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் நடிக்கும் பயாஸ்கோப்

சென்னை: சினிமா பற்றி எந்தவொரு அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள், எப்படி ஒரு படத்தை உருவாக்கினார்கள் என்பதை மையப்படுத்தி ‘பயாஸ்கோப்’ படம் உருவாகியுள்ளது. இது வரும் ஜனவரி 3ம் தேதி திரைக்கு வருகிறது. ‘வெங்காயம்’ படத்தை தொடர்ந்து சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். 25 டாட்ஸ் கிரியே ஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிர மணி, பெரியசாமி தயாரித்துள்ளனர்.

சிறப்பு வேடங்களில் சத்யராஜ், சேரன் ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் நடித்துள்ளனர்.  படம் குறித்து சங்ககிரி ராஜ்குமார் கூறுகையில், ‘கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான், ‘வெங்காயம்’ படத்தை இயக்கியபோது சந்தித்த சவால்கள் என்ன, அப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன என்பதை வெளிப்படுத்துகிற படமாக ‘பயாஸ்கோப்’ உருவாகியுள்ளது. முழுநீள காமெடி படம் இது. முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசை அமைத்துள்ளார்’ என்றார்.

Tags : Sangaki Rajkumar ,Sathyaraj ,Cheran ,Chennai ,
× RELATED கூனியூர், காருகுறிச்சியில் ரூ.16.6 லட்சத்தில் 5 புதிய டிரான்ஸ்பார்ம்கள்