சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் புதுச்சேரிக்கு சென்று இருந்தார். அங்கு அவர் சுற்றுலா துறை அமைச்சரை சந்தித்து அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல் பரவியது. விக்னேஷ் சிவனை நெட்டிசன்கள் இதற்காக மீம் போட்டு கலாய்த்து தள்ளிவிட்டனர். சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் பற்றிய இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இது பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். ‘என்னுடன் வந்த லோக்கல் மேனேஜர் தான் அப்படி அமைச்சரிடம் பேசினார்.
அதை நான் பேசியதாக மாற்றி புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. நான் புதுச்சேரி விமான நிலையத்தில் எல்ஐகே படத்தின் ஷூட்டிங் அனுமதி வாங்க மட்டுமே அங்கு சென்றேன். என்னை பற்றி வந்த மீம்கள் மற்றும் ஜோக்குகள் நன்றாக இருந்தது, ஆனால் அவை அநாவசியமானவை. அதனால் தான் விளக்கம் கொடுக்கிறேன்’ என விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.