×

இன்ஸ்டாவில் தொடர்ந்து புலம்பும் திரிஷா: யாரை தாக்குகிறார் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பம்

சென்னை: இன்ஸ்டா ஸ்டோரியில் அடிக்கடி யாரையோ தாக்கி பதிவுகளை போட்டு வருகிறார் நடிகை திரிஷா. இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித்துடன் விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரு படங்களில் நடிக்கும் அவர், கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் சூர்யாவின் 45வது படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் இது தவிர மலையாளத்தில் மோகன்லாலுடன் நடிக்கிறார். இதுபோல் பெரிய படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் ஒருவித மனஉளைச்சலுடன் திரிஷா இருப்பதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், ‘நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். எனது நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசம் மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்’ என்று பதிவிட்டார். அதன் மூலம் மனிதர்களை தான் நேசிப்பதில்லை என திரிஷா கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, உன்னை மனமுடைய செய்தவர் அவர்தான் என தெரிந்தும் அவருடன் நெருக்கமாகவும் நட்புடனும் பழகும் இன்னொரு ஒருவருடன் எந்தக்காலத்திலும் பழகக்கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த இன்ஸ்டா பதிவு உடனே புரிந்துகொள்ள பலர் சிரமப்பட்டு, பிறகு சுதாரித்து புரிந்துகொண்டனர். இப்போது நேற்று ஒரு இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில், ‘உங்களுக்கு ஒருநாள் லீவ் கிடைத்தது என்றால் அதை யாரிடமும் சொல்லாதீர்கள். ஒருவரிடம்கூட சொல்லாதீர்கள்’ என்று சீரியஸாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ‘அப்படி லீவ் கிடைத்து, யாரிடமாவது சொல்லி சிக்கலில் சிக்கினாரா? யார் அவர்? என்னதான் ஆகிவிட்டது திரிஷாவுக்கு?’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Tags : Trisha ,Chennai ,Ajith ,Kamal Haasan ,
× RELATED திரிஷா படத்திலிருந்து ரஹ்மான் திடீர் விலகல்