×

கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பிய விஷால்: புதுத் தகவல் லீக்

சென்னை: விஷாலுக்கு கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு இயக்குனர் ஒருவர் சென்ற சம்பவம் இப்போது வெளியே தெரிய வந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ‘பேபி ஜான்’ இந்தி படத்தின் மூலம் வட இந்தியாவிலும் இவர் கால் பதித்து விட்டார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் கீர்த்தி தன் 15 வருட காதலர் ஆண்டனியை வரும் 11ம் தேதி கோவாவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில், விஷாலுக்காக கீர்த்தி சுரேஷை பெண் கேட்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளார். அதன் விவரம்: சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த சமயத்தில் படப்பிடிப்புக்கு அடிக்கடி வந்த விஷாலின் பெற்றோருக்கு கீர்த்தி சுரேஷை பிடித்துவிட்டது. விஷாலுக்கு கீர்த்தியை பெண் கேட்க முடிவு செய்தார்கள்.

விஷாலும் இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் லிங்குசாமி விஷால் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். இதையடுத்து அவர் மூலமாக பேச முடிவு செய்து, விஷால் பெற்றோர் அவரை அணுகினர். அவரும் இது தொடர்பாக கீர்த்தி சுரேஷின் பெற்றோரிடம் பேசியுள்ளார். அப்போது இது பற்றி கீர்த்தி சுரேஷே பதிலளித்துள்ளார். அதன்படி தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து இந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இந்த தகவல் இப்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இத்தகவலை பரப்பி வருகிறார்கள். இப்போது தான் திருமணம் செய்ய உள்ள ஆண்டனியை காதலிப்பது பற்றித்தான் லிங்குசாமியிடம் அப்போதே கீர்த்தி சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vishal ,Keerthy Suresh ,Chennai ,North India ,
× RELATED திருமணம் முடிந்த நிலையில் பார்ட்டி:...