×

சினிமாவிலிருந்து விலகினார் 12த் ஃபெயில் ஹீரோ விக்ராந்த்

மும்பை: பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ‘12த் ஃபெயில்’ இந்தி படத்தில் நாயகனாக நடித்தவர் விக்ராந்த் மாஸே. தனது சிறப்பான நடிப்புக்காக இவர் பெரும் பாராட்டுகளை பெற்றார். பல இந்தி படங்களில் நடித்துள்ள இவர், நேற்று தனது சமூகவலைத்தளத்தில், ‘ஒரு முறை கடைசியாக புத்தாண்டில் உங்களை சந்திப்பேன் (புதிய படம் மூலம்). அதன் பிறகு விடைபெறுகிறேன். எனது குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும். எனது ஊருக்கு செல்ல வேண்டும். தந்தையாக, மகனாக, கணவனாக வாழ வேண்டும். அதனால்தான் இந்த முடிவு’ என தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த முடிவை கைவிடும்படி அவரை கேட்டு வருகிறார்கள்.

Tags : Vikrant ,Mumbai ,Bollywood ,Vikrant Massey ,
× RELATED பங்களாவின் படுக்கையறைக்கு அழைத்த...