×

அரசியல் கருத்துகளை நிறுத்தி விட்டேன் மிரட்டல் வந்ததா? சித்தார்த் பதில்

சென்னை: மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ, மோனிகா இணைந்து தயாரித்துள்ள படம், ‘மிஸ் யூ’. சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளனர். வரும் 29ம் தேதி இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இது தொடர்பாக சித்தார்த் அளித்த பேட்டி: பிடிக்காத பெண்ணிடம் ஹீரோ காதலை சொல்கிறான் என்பதுதான் ‘மிஸ் யூ’ படத்தின் ஒன்லைன். அது எப்படி முடியும் என கேட்டால், அதுதான் கதை. சித்தா படத்துக்கு பிறகு அதிலிருந்து வேறுபட்ட படத்தை தர விரும்பினேன்.

அதே சமயம், காதல் கதைகள் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. காதல் கதையில் நடித்தால் மீண்டும் ரொமான்டிக் ஹீரோ முத்திரை விழும். அதிலிருந்து மீண்டு வந்துள்ளதால், மீண்டும் ஒரு காதல் கதையில் நடிக்க தயங்கினேன். ஆனால் இயக்குனர் ராஜசேகர் சொன்ன கதை வித்தியாசமாக இருந்ததால் இதில் நடித்திருக்கிறேன்.

கடந்த 3 வருடத்துக்கு முன் சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துகளை தைரியமாக கூறி வந்தேன். ஆனால் திரையுலகில் இருப்பவர்களில் 2 பேர்தான் அரசியலை பேசுகிறார்கள். 98 பேர் அமைதியாக இருக்கிறார்கள். அதனால் நான் மட்டும் ஏன் பேச வேண்டும்? நானும் எனது வேலையை பார்க்கிறேன் என இருந்துவிட்டேன். மற்றபடி எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. இவ்வாறு சித்தார்த் கூறினார்.

Tags : Siddharth ,Chennai ,Samuel Mathew ,Monica ,Per ,Ashika Ranganath ,Red Giant ,
× RELATED பசங்க எல்லாரும் லவ் மூடில் இருக்காங்க…கார்த்தி ‘கலகல’