தேவையானவை:
முளைக்கட்டிய வெந்தயம் – 50 கிராம்,
வெங்காயம் (சின்னது) – 100 கிராம்,
தக்காளி – 50 கிராம்,
பூண்டு – 50 கிராம்,
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்,
தனியா தூள் – 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 1 ஒரு குழிக்கரண்டி,
கறிவேப்பிலை – 1 கொத்து,
உப்பு – சுவைக்கு,
புளி – எலுமிச்சை அளவு,
கடுகு – தாளிக்க.
செய்முறை:
புளியை வெந்நீரில் ஊறவைத்து, நன்றாக 2 கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து முளைக்கட்டிய வெந்தயத்தை வதக்கவும். பின்பு அதில் அறிந்த வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை வதக்கி, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, புளி கரைசல் விட்டு, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான வெந்தய காரக்குழம்பு தயார்.
The post முளைக்கட்டிய வெந்தய காரக் குழம்பு appeared first on Dinakaran.
