×

சுக்கு மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்

சுக்கு – 1 துண்டு
மிளகு – 2 தேக்கரண்டி
புளி – 50 கிராம்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – 1 தேக்கரண்டி.

செய்முறை:

முதலில் சுக்கு மற்றும் மிளகு ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, புளியைக் கரைத்து புளிக்கரைசல் தயார் செய்ய வேண்டும். பின்னர், எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்த பிறகு புளிக்கரைசல், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்த சுக்கு மிளகு கலவையை சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்த பிறகு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும். சுக்கு மிளகு குழம்பு தயார்.

 

Tags :
× RELATED ப்ரோக்கோலி சூப்