×

மனைவி கண்டிப்பு: கிரேன் உரிமையாளர் மாயம்

 

புதுச்சேரி, ஜூலை 17: புதுச்சேரி சேதராப்பட்டு முத்தமிழ் நகரை சேர்ந்தவர் குமார். திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு சிவகங்கை (49) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் 2 பேருக்கும் திருமணமாகிவிட்டது. குமார், 2 கிரேன்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 13ம் தேதி மதியம் கணவர் மது அருந்தி வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது.

இதனை மனைவி கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற குமார், அதன்பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. காணாமல்போன அன்று அவர், நீல நிற, அரைக்கை சட்டையும், கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். மாநிறம், ஒல்லியான திரேகம் உடையவர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுபற்றி அவரது மனைவி சிவகங்கை, சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான குமாரை தேடி வருகின்றனர்.

The post மனைவி கண்டிப்பு: கிரேன் உரிமையாளர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Crane ,Puducherry ,Kumar ,Muthamil ,Sivaganga ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்