- கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.
- ஓரணியில் தமிழ்நாடு
- திருவள்ளூர்
- வி.ஜி.ராஜேந்திரன்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி
- கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம்
- மாப்பு
- முதுகுர் பஞ்சாயத்துகள்…
- தின மலர்
திருவள்ளூர், ஜூலை 17: கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் `ஓரணியில் தமிழ்நாடு’ வீடுவீடாக சென்று தீவிரமாக உறுப்பினர் சேர்க்கும் பணியில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஈடுபட்டார். திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி, கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம், மப்பேடு மற்றும் முதுகூர் ஊராட்சிகளில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, “ஓரணியில் தமிழ்நாடு’’ இயக்கத்தின் கீழ் உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கோபால், நீலாவதி ராஜேந்திரன், கீதா முனுசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு, வீடுவீடாகச் சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, தீவிரமாக உறுப்பினர்களை சேர்த்தார். நிகழ்வில் நிர்வாகிகள் சண்முகம், முரளி, தயாளன், சரவணன், ஸ்ரீதர், மணி, தினேஷ், ராஜசேகர் மேகநாதன் ஜெயப்பிரகாஷ், சரவணன், சுதா, முருகேசன், ரத்தினவேல், சரவணன் தணிகைவேல், பிரபாகர், விநாயகம், காயத்ரி குமரேசன், சூர்யா, மஞ்சுவரதன், மதன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
The post கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் `ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.
