×

மதிமுக இளைஞரணி செயலாளர் மீது தாக்குதல்

மாதவரம், டிச.13: கொடுங்கையூர் ஆர்.வி.நகரை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (38). மதிமுக கட்சியில் வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் தனது நண்பரான வினோத் என்பவரிடம் கடந்த 2015ம் ஆண்டு ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வினோத் மேலும் பணம் வேண்டும் என கேட்டு அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து ஜெய்கணேஷை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் ஏற்பட்ட ஜெய்கணேஷ் கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர், இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : MDMK Youth Wing ,Madhavaram ,Jayganesh ,Kodungaiyur RV Nagar ,North Chennai District Youth Wing ,MDMK ,Vinoth ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு