×

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனைப் பெற்று தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது… யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!.

வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் ‘சார்கள்’ பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக...