×

மின்சார கட்டணத்தை உயர்த்துவதை கைவிடக் கோரி கம்யூ., ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு,ஜன.7: உதய் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்துவதை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) சார்பில், ஈரோடு மூலப்பாளையம் மாநகராட்சி 4வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார்.

இதில், வீடு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான வரி உயர்வையும், ஒவ்வொரு வருடம் 6 சதவீத வரி உயர்வு செய்வதையும் கைவிட வேண்டும். அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களையும்,குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குடிநீர் விநியோகத்தை அனைத்து வீடுகளுக்கும் உறுதிப்படுத்த வேண்டும். 4வது மண்டலத்தில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ரகுராம், மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மின்சார கட்டணத்தை உயர்த்துவதை கைவிடக் கோரி கம்யூ., ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,Marxist ,Erode Moolapalayam… ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...