×

பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது: சீனா சொல்கிறது

பெய்ஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவதால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது. ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா எல்லையில் சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டுகிறது. சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான இமயமலைப் பகுதியில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் திபெத்தின் டெக்டோனிக் தட்டு பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட உள்ளது. இந்த அணை மூலம் நீர்மின் திட்டத்தையும் தொடங்க சீனா முடிவு செய்து இருக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் பிரம்மபுத்ரா நதி மூலம் பயன்பெறும் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தண்ணீர் வராது என்ற நிலை உருவாகி உள்ளது. மேலும் அதிக அளவு தண்ணீர் திறந்தாலும் மிகக்கடுமையான பாதிப்பை உருவாக்கலாம், ஏன் இமயமலையின் ஒரு பகுதியே சரிந்து விழுந்துவிடலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியதாவது: இந்திய எல்லைக்கு அருகில் திபெத்தில் உள்ள யர்லுங் சாங்போ என்ற பெயரில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது அணை கட்ட சீனா கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சலப் பிரதேசத்துக்கும், அதைத்தொடர்ந்து வங்காளதேசத்துக்கும் செல்லும் போது சீனாவுக்குள் நுழைந்து பெரிய யு-டர்ன் செய்யும் இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் மிகப்பெரிய அணை கட்டப்படும். பிரம்மபுத்ராவின் குறுக்கே மிகப்பெரிய அணையை கட்டுவதால் அதன் கீழ் பகுதியில் இந்தியா, வங்கதேசம் நாடுகளுக்கு தண்ணீர் செல்வதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. அதே சமயம் பாதுகாப்பு பிரச்சினைகள் ஆய்வுகள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. எனவே தற்போது எப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதோ, அதே அளவு தண்ணீர் அணை கட்டிய பிறகும் சீனா வழங்கும். மேலும் அணை பராமரிப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது: சீனா சொல்கிறது appeared first on Dinakaran.

Tags : Brahmaputra ,India ,China ,Beijing ,Brahmaputra river ,Tibet ,Bangladesh ,Indian border ,Dinakaran ,
× RELATED பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைய...