×

அம்மாப்பேட்டை வீரமா காளியம்மன் கோவிலில் செளபாக்கிய வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

 

தஞ்சாவூர், ஜன. 6: அம்மாப்பேட்டை வீரமா காளியம்மன் கோவிலில் உள்ள செளபாக்கிய வராகி அம்மனுக்கு பஞ்சமியை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் வீரமா காளியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில்  செளபாக்கிய வராகி அம்மன் சன்னதி தனியாக உள்ளது. அங்கு செளபாக்கிய வராகி அம்மனுக்கு அனைத்து பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரம் நடைபெறும். இந்த நிலையில் நேற்று பஞ்சமியை முன்னிட்டு செளபாக்கிய வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அம்மாப்பேட்டை பகுதி மக்கள் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகி அசோக்குமார் செய்திருந்தார்.

The post அம்மாப்பேட்டை வீரமா காளியம்மன் கோவிலில் செளபாக்கிய வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Goddess ,Chaupakiya Varaghi Amman ,Ammapettai ,Kaliamman Temple ,Thanjavur ,Ammapettai Veerama Kaliamman Temple ,Panchami ,Veerama Kaliamman Temple ,Ammapettai, Thanjavur district ,Chaupakiya ,Varaghi… ,
× RELATED சிவனுக்கு தோஷம் போக்கிய மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி