×

மினி லாரியில் கடத்திய 390 கிலோ குட்கா பறிமுதல்

 

சேந்தமங்கலம், ஜன.6: எருமப்பட்டி அருகே மினி லாரியில் கடத்திய, 390 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எருமப்பட்டி போலீசார் நாமக்கல் மாவட்ட எல்லையான மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சி சென்ற மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது மளிகை பொருளுடன் 390 கிலோ குட்காவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த காட்டுவலசு பகுதியை சேர்ந்த டிரைவர் கணபதி (26) என்பவரை கைது செய்து, குட்கா, மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மினி லாரியில் கடத்திய 390 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Erumapatti ,Erumapatti police ,Mettupatti ,Namakkal district ,Dinakaran ,
× RELATED மனைவி கோபித்து சென்றதால் தாய், தந்தையுடன் வாலிபர் தற்கொலை