×

புதுக்கோட்டை மாணவி மரணம்: ஸ்வாப் டெஸ்ட் எடுக்க அனுமதி வழங்கிய ஐகோர்ட் கிளை

மதுரை: புதுக்கோட்டை கல்லூரி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவத்தில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஸ்வாப் டெஸ்ட் எடுத்து முழு ஆய்வு செய்ய வேண்டும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்வாப் டெஸ்ட் எடுப்பதுடன் மாணவியின் உடலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post புதுக்கோட்டை மாணவி மரணம்: ஸ்வாப் டெஸ்ட் எடுக்க அனுமதி வழங்கிய ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,iCourt ,Madurai ,High Court ,Pudukkottai College ,Soumia ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறிய...