×

ஏரியில் கவிழ்ந்த சிமென்ட் லாரி : 3 பேர் உயிர் தப்பினர்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தாம்பரத்திலிருந்து 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையோர ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் உட்பட 2 லோடு மேன்கள் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடினர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர். 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயார் போலீசார், லாரியை கிரேன் மூலம் மீட்டனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

The post ஏரியில் கவிழ்ந்த சிமென்ட் லாரி : 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Kuduvancheri ,Tambaram ,Keerappakkam ,Vandalur ,Dinakaran ,
× RELATED வண்டலூரில் ரூ.6.36 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன பீல்டு ஆபீசர் கைது