×

பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது; அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும் :பாலச்சந்திரன்

சென்னை : அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது என்று தென் மண்டல வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “வடகிழக்கு பருவமழை காலத்தில் 6 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் 18%மும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 33%மும் இயல்பைவிட அதிக மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தமாக 590 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது; அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது; அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும் :பாலச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pongal ,Balachandran ,Chennai ,Zone ,North East ,
× RELATED 17ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிப்பு...