×

பொங்கல் தொகுப்புடன் ₹1000 கட்சித்தலைவர்கள் கோரிக்கை

சென்னை: பொங்கல் தொகுப்புடன் ₹1000 வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்று ராமதாஸ், முத்தரன், வாசன் வலியுறுத்தி உள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹1000 வழங்கப்பட வேண்டியது அவசியம். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ₹1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: பொங்கல் தொகுப்பில் ரொக்க தொகை குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ‘ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது’ என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ஒன்றிய பாஜ அரசு கடந்த 2021ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை, கழுத்தை முறிக்கும் நிதி நெருக்கடி நிலவும் நிலையிலும், புதிய நிதிச் சுமைகளை தமிழ்நாடு அரசே தாங்கி, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

இதை கருத்தில் கொண்டு, நிதியமைச்சரின் முடிவின் மீது முதல்வர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ₹1000 வழங்க வேண்டும். இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

The post பொங்கல் தொகுப்புடன் ₹1000 கட்சித்தலைவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pongal ,Chennai ,Ramadoss, Mutharan and Vasan ,Tamil Nadu government ,PMK ,Ramadoss ,Dinakaran ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல்...