- யூனியன்
- தலைமை நிதி அதிகாரி
- சென்னை
- துணை தலைவர்
- உதயநிதி
- பெருவர்ஸ்
- சென்னை தெற்கு
- வில்லுப்புரம் வடக்கு
- கடலூர் மேற்கு மாவட்டங்கள்
- துணை
- தின மலர்
சென்னை: சென்னை தெற்கு, விழுப்புரம் வடக்கு, கடலூர் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை நியமித்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இளைஞர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள், தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்புகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை தெற்கு, விழுப்புரம் வடக்கு, கடலூர் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு appeared first on Dinakaran.