- திருப்பதி திருவிழா
- திருத்தணி
- திருட்டானி முருகன் கோயில்
- நெடுஞ்சாலைத் துறை
- ஆங்கிலப் புத்தாண்டு
- திருவள்ளூர்
- தின மலர்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு புயல் மழைக்கு சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மற்றும் கனமழைக்கு சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகள் சீரமைக்க நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட் கோட்டத்தில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், திருத்தணி நகரில் ஆங்காங்கே சேதமடைந்துள்ள சித்தூர் சாலை, அரக்கோணம் சாலை, பைபாஸ் சாலை உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில் திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். மழைக்கு சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post திருப்படித் திருவிழாவை முன்னிட்டு சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு appeared first on Dinakaran.