×

பலாத்கார வழக்கு டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம்: மேல் முறையீட்டு கோர்ட் உறுதி செய்தது

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்க உள்ளார். கடந்த 1996ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தன்னை டிரம்ப் பலாத்காரம் செய்தார் என பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் புகார் அளித்தார். இது தொடர்பாக டிரம்புக்கு எதிராக பலாத்காரம் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப் விசாரணையில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்தது. இதை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் டிரம்ப் மேல்முறையீடு செய்தார். நியூயார்க், பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்புக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உறுதி செய்துள்ளது.

The post பலாத்கார வழக்கு டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம்: மேல் முறையீட்டு கோர்ட் உறுதி செய்தது appeared first on Dinakaran.

Tags : Trump ,New York ,US presidential election ,Jean Carroll ,New York.… ,Dinakaran ,
× RELATED ஆபாச பட நடிகை வழக்கில் தண்டனையை தள்ளி...