- ஜி. வாசன்
- காஞ்சிபுரம்
- Tamaga
- ஜனாதிபதி
- சிறுகாவேரிப்பாக்கம்
- மேயர்
- ஷங்கர்
- பஞ்சாயத்து
- துணை ஜனாதிபதி
- அபிராமி சங்கர்
- தெற்கு
- மாவட்டம்
- மலையூர்…
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் மாநகர தலைவர் சங்கர், சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சி துணை தலைவர் அபிராமி சங்கர் ஆகியோர் ஏற்பாட்டில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, 60 கிலோ கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞரணி மாநில பொது செயலாளர் சங்கர். மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் சுதர்சன், துணை தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் சசிகுமார், சுகுமார், விஷார் ஊராட்சி தலைவர் கார்த்திக், ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.