*அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தற்போது ₹53 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் இந்த அரசு மருத்துவமனையையே நம்பி உள்ளனர். இங்கு ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது.
இதில் உள்ள ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவில் தெரு நாய் ஒன்று சாவகாசமாக சுற்றி திரியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த நாய் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் சுற்றி திரியும்போது அதனை நோயாளிகளே எழுந்து துரத்துகின்றனர்.இதேபோல் மருத்துவமனையில் பல வார்டுகளில் நாய்கள் சுற்றித்திரிகின்றன.
இதனால் நாய்கள் கடிக்கும் என மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அச்சமடைகின்றனர். எனவே நாய்களை பிடிக்க உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவலாளிகள் முறையாக கண்காணிக்கக வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
The post அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் நாய்கள் appeared first on Dinakaran.