பந்தலூர், டிச.27: எருமாடு வெட்டுவாடி பகுதியில் பாக்கு உரிக்கும் பணியில் பழங்குடியினர் மும்முரமாக பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் தேயிலை, காப்பி உள்ளிட்ட பயிருடன் ஊடு பயிர்களாக பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர். கூடலூர், பந்தலூர் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பாக்கு பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பாக்கு பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் பறிக்கும் பாக்குகளை பழங்குடியினர் பெண்கள் மற்றும் ஆண்கள் உரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரித்த ஒரு கிலோ பாக்கிற்கு ரூ.12 வரை தொழிலாளிக்கு கிடைப்பதாக கூறுகின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.400 வரை கூலி பெறுவதாக கூறுகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளான அய்யன்கொல்லி, எருமாடு, பாட்டவயல், கையுன்னி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் பெண்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post எருமாடு வெட்டுவாடி பகுதியில் பாக்கு உரிக்கும் தொழிலை நம்பி வாழும் பழங்குடியின மக்கள் appeared first on Dinakaran.